#கேள்வி

மக்கா முஷ்ரிக்குகள் அல்லாஹ்வை நம்பினார்கள்.

அத்துடன் சிலைகளிடம் உதவி தேடினார்கள்.

அதுபோன்றுதான் இன்றைய முஸ்லிம்களும் அல்லாஹ்வை நம்புகிறார்கள்.

அதனுடன் வலிமார்களிடம் உதவி தேடுகிறார்கள்.

மக்காமுஷ்ரிக்குகளைப் போன்றுதான் இன்றைய முஸ்லிம்களின் செயல்பாடு என்று வஹாபிகள் சொல்வதைப் பற்றி?

*#பதில்*

*மகான்களிடம் உதவி தேடுவது இன்றைய முஸ்லிம்கள் மட்டும் செய்யக்கூடிய செயல் அல்ல.*

*ஸஹாபாக்கள் காலம் முதல் நடைமுறையில் இருந்து வரும் செயல்தான்.*

*காஃபிர்கள் மீது இறங்கிய வசனங்களை முஸ்லிம்கள் மீது சுமத்தும் கவாரிஜ்களின் இழிவான செயல்தான் வஹாபிகளின் இந்தக் குற்றச்சாட்டு.*

*மக்கா  காஃபிர்களின் செயலுக்கும் முஸ்லிம்களின் உதவி தேடுதலுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் உண்டு.*

*மக்கா காஃபிர்கள் ஏக இறைவனை நம்பவில்லை.சிலைகளையும் தெய்வங்களாக நம்பினார்கள்." பல தெய்வங்களை முஹம்மத் ஒரு தெய்வம் ஆக்குகிறாரா" (ஸாத்:5) என்று கேட்டார்கள்.*

*நாம் அல்லாஹ்வை மட்டுமே இலாஹ் என்று நம்புகிறோம்.நபிமார்களும் வலிமார்களும் அல்லாஹ்வின் படைப்புகளே.என்று நம்புகிறோம்.*

*மக்கா காஃபிர்கள் ஒரு தடவை கூட தவ்ஹீதின் தாரகமந்திரமான லாயிலாஹ இல்லல்லாஹ்வை சொல்லத் தயாராகவில்லை.நாம் மூச்சுக்கு முன்னூறு தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்கிறோம்.*

*மக்கா கஃபிர்கள் சிலைகளை வணங்கினார்கள்." எங்களை இந்தச் சிலைகள் அல்லாஹ்வோடு நெருக்கி வைப்பதற்காக அல்லாமல் நாம் இவைகளை வணங்கவில்லை (சுமர்: 3) என்று சொன்னார்கள்.*

*முஸ்லிம்கள் அல்லாஹ் உதவும் ஆற்றலை படைப்பதன் மூலமாக வலிமார்கள் உதவுவார்கள் என்று நம்புகிறார்கள்.*

*மனைவியிடமும்,  மருத்துவரிடமும் உதவி தேடுவதைப் போல*

*மக்கா காஃபிர்களைப் போல வலிமார்களை  வணங்கவில்லை.உதவி தேடுதல் என்பது வணக்கமாகிவிடாது.மக்கா காஃபிர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களைப் புரியும் அறிவாற்றல் வஹாபிகளுக்கு இல்லாமலாகிவிட்டது.*

*ஆக்கம்:*
 *M.தாஜுத்தீன்அஹ்ஸனி.*

*தகவல்:*
#*சிராஜுத்தீன் அஹ்ஸனி*