அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரிய சகோதர ஆலிம்பெருமக்களே!
(இன்ஷாஅல்லாஹ்...)
25/01/2019
🕌இந்த வாரம்🕌
🎤ஜும்ஆ பயான்🔊
📜தலைப்பு..✍🏼
நவீன குழப்பங்களும்,
தடுமாறும் சமூகமும்..!
بسم الله الرحمن الرحيم.
الصلاة والسلام علكم يا سيدي يارسول الله صلى الله عليه وسلم...
சமீப நாட்களாக இணைய வலைத் தளங்களில் பரவலாக பகிரப்படக் கூடிய செய்தி, வருகிற 26,27,28 திருச்சியில் நடை பெற இருக்கிற "இஜ்திமாஃ" வைப் பற்றித்தான். பொதுவாகவே எல்லா அமைப்புகளிலும் சில விஷயங்கள் கடைபிடிக்கப் படும். அது என்ன வென்றால், தங்களுக்கு ஆதாயம் தேவையென்றால், உடனே அவர்கள்
மற்ற அமைப்புகளை விமர்சிப்பதும், தூற்றுவதும், கேலிக்கூத்து பண்ணுவதும் அன்றாடம் நாம் பார்க்கக் கூடிய செய்திகள் தான். ஆனால், தற்போது இந்த இஜ்திமாஃ வின் விஷயத்தில் இந்த தப்லீக் அமைப்பு மூலமாக வரக்கூடிய செய்திகளைப் பொருத்த வரையில் கொஞ்சம் எல்லை மீறிய செயல்களாகவே காணப் படுகிறது. அப்படி என்ன எல்லை மீறிய செயல்கள் என்றால், தற்போது இந்த தப்லீக் அமைப்பு மூலமாக பல (முஃப்தி) அதிமேதாவிகள் உலாவந்து கொண்டிருக்கின்றனர். மார்க்கம் என்கிற பெயரில் இவர்கள் சொல்லும் செய்திகள் என்னென்ன என்பதையும், அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பதை வையகம் சிறக்க வந்த வான்மறை குர்ஆன் மற்றும் வள்ளல் நபிகளின் வாழ்வியல் வழிகாட்டுதல் மூலமாக தெளிவான ஆதாரங்களோடு இன்ஷா அல்லாஹ் நாம் தொடர்ந்து பார்ப்போம்!
இந்த தப்லீக் அமைப்பினர் தற்போது சொல்லக் கூடிய குற்றச்சாட்டுகளும், அவர்களின் எதார்த்த நிலைபாடுகளும்:
--------------------------
குற்றச்சாட்டு:(1)
---------------
இஜ்திமாவில் கலந்து கொள்ளாதவர்கள் நஷ்டவாளிகள்!
குற்றச்சாட்டு: (2)
----------------
இஜ்திமாவிற்காக (3) நாட்கள் சென்று தங்குவது தான் ஜிஹாதும், ஹிஜ்ரத்தும் ஆகும். செல்லாதவர்கள் ஹிஜ்ரத்தை வெறுத்தவர்கள்!
குற்றச்சாட்டு:(3)
---------------
3நாள், 10நாள், 40 நாட்கள் என்று ஜமாத்திற்குச் செல்லாத ஆலிம்கள் ஆலிம்களில்லை!
குற்றச்சாட்டு:(4)
----------------
சம்பளம் வாங்கிக் கொண்டு ஓதிக் கொடுக்கும் ஆலிம்கள் விபச்சாரிகளை விட தரம் தாழ்ந்தவர்கள்! இ(ந்த ஆலிமான)வர்களை விட, சீக்கிரமே நாளை மறுமையில் விபச்சாரி சுவர்க்கம் சென்று விடுவாள்!
குற்றச்சாட்டு:(5)
---------------
செல்ஃபோனில் குர்ஆனைப் பார்த்து ஓதுதல், சிறுநீர் கழித்த பாத்திரத்தில் பால் குடிப்பதைப் போன்றது!
இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் என்றால்...
இன்னொரு பக்கம் இந்த தப்லீக் அமைப்பினரின் நிலைபாடுகள்:
--------------------------
நிலைபாடு:(1)
--------------
ஈஸால் ஸவாப் நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொள்வதில்லை!
நிலைபாடு:(2)
--------------
வஸீலா தேடுவது இணைவைப்புச் செயல்!
நிலைபாடு:(3)
--------------
ஸலவாதுன் நாரியா, புர்தா, மவ்லூது, ராத்திபு போன்றவைகள் பித்அத்தும், இணைவைப்புமாகும்!
நிலைபாடு:(4)
--------------
3,நாட்கள் 10, நாட்கள் 40, நாட்கள் ஜமாத்திற்கு வந்தவர்களுக்கு மாத்திரமே உதவி செய்ய வேண்டும்.
நிலைபாடு:(5)
--------------
பள்ளிவாசலில் காலையிலோ, மாலையிலோ தஃப்ஸீர், தர்ஜுமா, பயான் போன்ற மார்க்கக் கல்விகள் போதனை செய்யப்பட்டாலும், தஃலீம் புத்தகத்தை வாசிப்பதே சிறந்த அமல்!
நிலைபாடு:(6)
--------------
தொழுகையில் ஒருவருக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஞாபகம் வருவது, ஆடு, மாடு சிந்தனை வருவதை விட கேவலமானது!
இப்படி இவர்களின் குற்றச்சாட்டுகளும், நிலைபாடுகளும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. இருந்தாலும் இங்கே ஒரு சில செய்திகளை மட்டுமே நாம் பதிவு செய்திருக்கிறோம்.
இப்போது அவைகளுக்கான பதில்களும், நமக்கான நிலைபாடுகள் என்னென்ன என்பதையும் குர்ஆன், ஹதீஸ்களின் ஆதாரங்களின் அடிப்படையில் "இன்ஷா அல்லாஹ்" தெளிவாக நாம் பார்ப்போம்.!
இந்த தப்லீக் அமைப்பினர் நம்மீது சொல்லும் குற்றச்சாட்டு (1)ற்கான பதில்:
----------------------
இஜ்திமாஃ வில் கலந்து கொள்ளாதவர்கள் நஷ்டவாளிகள் என்கிறார்கள் இந்த தப்லீக் அமைப்பினர்...
இதோ குர்ஆன் சொல்லக் கூடிய *நஷ்டவாளிகள்* யார்,யார் என பார்ப்போம்.
சூரா அல்பகரா:வசனம்-27ல் அல்லாஹ் கூறுகிறான்.
الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ
مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ
يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ ۚ أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் *நஷ்டவாளிகள்* .
(Sura Al-Baqarah, Ayah 27)
இந்த வசனத்தில், செய்த ஒப்பந்தத்தை முறிப்பவர்களும், பூமியில் குழப்பம் செய்பவர்களுமே *நஷ்டவாளிகள்* என்று அல்லாஹ் கூறுகிறான்.
அடுத்து...
சூரா அத்தவ்பா- வசனம்:69 ல் அல்லாஹ் கூறுகிறான்.
كَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ كَانُوا أَشَدَّ مِنْكُمْ قُوَّةً
وَأَكْثَرَ أَمْوَالًا وَأَوْلَادًا فَاسْتَمْتَعُوا
بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا
اسْتَمْتَعَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ
وَخُضْتُمْ كَالَّذِي خَاضُوا ۚ أُولَٰئِكَ حَبِطَتْ
أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் *நஷ்டவாளிகள்* .
(Sura At-Tawbah, Ayah:69)
இந்த வசனத்தில், முனாஃபிக்கீன்களையும், வீணான தர்கம் செய்பவர்களையுமே அல்லாஹ் *நஷ்டவாளிகள்* என்று குறிப்பிடுகிறான்.
அடுத்து...
சூரா அல்கஹ்ஃபு-வசனம்:103,104-ல் அல்லாஹ் கூறுகிறான்.
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا
"(தம்) செயல்களில் மிகப் பெரும் *நஷ்டவாளிகள்* யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.
(Sura Al-Kahf, Ayah:103)
الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا
وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.
(Sura Al-Kahf, Ayah:104)
மேற்கூறப்பட்ட இரண்டு வசனங்களிலும், இவ்வுலகில் கெட்ட செயல்களை நல்லவைகள் என எண்ணிக் கொண்டு தங்களின் காரியங்களை செய்பவர்கள் தான் *நஷ்டவாளிகள்* என்று அல்லாஹ் கூறுகிறான்.
அடுத்து...
சூரா அல் அன்கபூத்-வசனம்:52 ல் அல்லாஹ் கூறுகிறான்.
قُلْ كَفَىٰ بِاللَّهِ بَيْنِي وَبَيْنَكُمْ شَهِيدًا ۖ
يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ
وَالَّذِينَ آمَنُوا بِالْبَاطِلِ وَكَفَرُوا بِاللَّهِ
أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
"எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் *நஷ்டவாளிகள்* என்று (நபியே!) நீர் கூறும்.
(Sura Al-Ankabut, Ayah:52)
இந்த வசனத்தில், பொய்யை நம்பிக்கை கொண்டு, அல்லாஹுவின் கொள்கைகளை நிராகரிப்பவர்கள் தான் *நஷ்டவாளிகள்* என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அடுத்து...
சூரா-அஸ்ஸுமர் வசனம்:15 ல் அல்லாஹ் கூறுகிறான்.
فَاعْبُدُوا مَا شِئْتُمْ مِنْ دُونِهِ ۗ قُلْ إِنَّ
الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ
وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ ۗ أَلَا ذَٰلِكَ هُوَ
الْخُسْرَانُ الْمُبِينُ
"ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." கூறுவீராக "தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் *நஷ்டவாளிகள்* . அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க."
(Sura Az-Zumar, Ayah:15)
இந்த வசனத்தில், தங்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக அல்லாஹுவுக்கு இணைவைத்து வணங்கி வந்தவர்களையே, இங்கு அல்லாஹ் *நஷ்டவாளிகள்* என்று குறிப்பிடுகிறான்.
அடுத்து...
சூரா அஸ்ஸுமர்-வசனம்:63-ல் அல்லாஹ் கூறுகிறான்.
لَهُ مَقَالِيدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَالَّذِينَ
كَفَرُوا بِآيَاتِ اللَّهِ أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
வானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் *நஷ்டவாளிகள்* .
(Sura Az-Zumar, Ayah:63)
இந்த வசனத்தில், அல்லாஹுவின் குர்ஆனை நிராகரிப்பவர்களே *நஷ்டவாளிகள்* என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
குர்ஆனில் *நஷ்டவாளிகள்* என்று அடையாளமிடப் பட்டு வரக்கூடிய வசனங்கள் மொத்தம் ஆறாகும்.
இவைகளில் எங்காவது தப்லீக் இஜ்திமாஃ விற்கு செல்லாதவர்கள் நஷ்டவாளிகள் என்று வருகிறதா..? ஆக, குர்ஆன் சுட்டிக் காட்டாத ஒன்றை தங்களுடைய ஆதாயத்திற்காக மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பகிரங்கமாக இட்டுக்கட்டை, பொய்யை மார்க்கம் என்கிற பெயரில் இந்த வஹ்ஹாபிய *தப்லீக்* அமைப்பினர் பரப்பி வருகின்றனர் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
குற்றச்சாட்டு(2) ற்கான பதில்:
----------------------
இஜ்திமாஃ விற்கும், ஜமாத்திற்கும் 3,நாள் செல்வதை தவிர்ப்பது ஹிஜ்ரத்தை வெறுப்பபது என்கின்றனர் இந்த தப்லீக் அமைப்பினர்...
இதோ ஹிஜ்ரத்தைப் பற்றி குர்ஆன் சொல்லும் செய்திகளைப் பார்ப்போம்.
சூரா அன் நிஸா-வசனம்:100-ல் அல்லாஹ் கூறுகிறான்.
وَمَنْ يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي
الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً ۚ وَمَنْ يَخْرُجْ
مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ
يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ
ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(Sura An-Nisa', Ayah:100)
மேற்கூறப்பட்ட வசனம் முதற்கொண்டு குர்ஆனில் மொத்தம் (10) இடங்களில் ஹிஜ்ரத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். அதில் இந்த தப்லீக் அமைப்பினர் செய்து வருகின்ற சேட்டைகளான சட்டி,பெட்டியை தூக்கிக் கொண்டு போய் மட்டன்கறி, கோழிக்கறி, வாத்துக்கறி, மாட்டுக்கறி, மீன் வகைகளை சமைத்து பள்ளிக்கு பக்கத்துல இருக்கிற ஏழைகளுக்கெல்லாம் வயிறு எரிச்சலை கிழப்பி விட்டு, நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு, பள்ளிவாசலே அதிரும் அளவிற்கு குறட்டை விட்டு தூங்கிக் கிட்டு(3) நாட்கள்(10) நாட்கள் (40)நாட்கள் என தன் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்காமல் ஊர் ஊராக, மாவட்டம் மாவட்டமாக, மாநிலம் மாநிலமாக, நாடு நாடாக சுற்றிக் கொண்டு வருவதை, மேற்கூறப்பட்ட வசனங்களில் எந்த ஒரு வசனத்திலும் அல்லாஹ் கூறவில்லை என்பதே மிகத் தெளிவாக குர்ஆன் நமக்குச் சொல்லும் உண்மையாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
குற்றச்சாட்டு(3) ற்கான பதில்:
------------------------
3நாட்கள், 10நாட்கள்,40 நாட்கள் என ஜமாத்திற்குச் செல்லாதவர்கள் ஆலிம்களில்லை என்கின்றனர் இந்த தப்லீக் அமைப்பினர்...
இதோ, யார் ஆலிம்கள்? அவர்களின் தரம் என்ன? அந்தஸ்து என்ன என்பதை நாம் பார்ப்போம்.
حدثنا سعيد بن عفير قال: حدثنا ابن وهب عن يونس عن ابن شهاب قال: قال حميد بن عبد الرحمن سمعت معاوية خطيبا يقول: سمعت النبي صلى الله عليه وسلم يقول:
*من يرد الله به خيرا يفقهه في الدين،*
وإنما أنا قاسم والله يعطي،
ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله.(71-புஹாரி)
'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை *மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்* . (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி-71)
மேற்கூறப்பட்ட ஹதீஸில்,
ஒருவருக்கு நன்மைகளில் சிறந்தது அவருக்கு அல்லாஹ் கொடுக்கும் மார்க்க ஞானம் தான் என நபிகளார் சொல்கிறார்கள். யார் *மார்க்க ஞானம்* பெற்றார்களோ அவர்களே *ஆலிம்கள்* ஆவார்கள் என நபிகளாரின் இந்த ஹதீஸின் மூலம் அறிய முடிகிறது.
அடுத்ததாக...
சூரா அஸ்ஸுமர்-வசனம்:9 ல் அல்லாஹ் கூறுகிறான்.
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ
لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
(நபியே!) நீர் கூறும்; "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்."
(Sura Az-Zumar, Ayah:9)
இந்த வசனத்தில் ஆலிம்களும், ஆலிம் அல்லாதவர்களும் சமமாக மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இன்னொரு வசனத்தில்....
وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۖ وَمَا
يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ
இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை *ஆலிம்களைத்* தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
(Sura Al-Ankabut, Ayah:43)
அல்லாஹுவின் வசனங்களை விளங்கிக் கொள்பவர்கள் ஆலிம்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் சூரா அல்ஃபாதிர்-வசனம்:28 ல் அல்லாஹ் கூறுகிறான்.
ۗ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ ۗ
إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ.
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
(Sura Fatir, Ayah:28)
அல்லாஹுவின் அச்சம் அதிகமாக உள்ளவர்கள் ஆலிம்கள் தான் என்று, அல்லாஹ் ஆலிம்களின் குணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.
மேலும் இன்னொரு வசனத்தில் ஆலிம்களின் மேன்மையை அல்லாஹ் கூறுகிறான்.
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ
இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (நபியவர்களின் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்."
(Sura Al-Mulk, Ayah:10)
(இன்றைக்கு இந்த போதனையைத் தான் ஆலிம்கள் சதாவும் பள்ளிவாசல்களில் செய்து கொண்டிருக்கிறார்கள்)
ஆக, மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆலிம்கள் யார்? அவர்களின் அந்தஸ்து, தரம் என்ன என்பதை மிகத் தெளிவாக உலக மக்களின் காதுகளில் விழும்படி அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
(அல்ஹம்துலில்லாஹ்.!) இது ஏனோ இன்னும் இந்த தப்லீக் அமைப்பினரின் செவிட்டுக் காதுகளில் இன்னும் விழ வில்லை.
எனவே இந்த தப்லீக் அமைப்பினர் சொல்வதைப் போல ஜமாத்திற்குச் சென்றால் தான் ஆலிம்கள் என்று எந்த வசனமும், ஹதீஸும் நமக்கு அறிவுறுத்த வில்லை என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிகத் தெளிவான விஷயங்களாகும்.
குற்றச்சாட்டு:(4) ற்கான பதில்:
-------------------------
சம்பளம் வாங்கும் ஆலிம்கள் விபச்சாரிகளை விடக் கேவலமானவர்கள் என்றும், விபச்சாரிகள் ஆலிம்களை விட முன்னால் சுவர்க்கம் செல்வார்கள் என்கின்றனர் இந்த தப்லீக் அமைப்பினர்...
இதோ ஆலிம்கள் பள்ளிகளில், மத்ரஸாக்களில் செய்யும் தங்களின் சமுதாயப் பணிக்காக சம்பளம் வாங்கலாமா? என்பதைப் பற்றி ஆய்வுகளைப் பார்ப்போம்.
செய்யிதினா அபூபக்கர் (ரலி) அவர்கள், கலீஃபாவாக பொறுப்பேற்ற பின்னால், குடும்ப செலவிற்கான வருமானம் இல்லாமல் கஷ்டப் பட்டார்கள். இதைப் பார்த்த உமர் ரலி அன்ஹு அவர்கள், கலீஃபாவின் பொருளாதார குடும்ப செலவீனங்கள் விஷயத்தில் என்ன செய்யலாம் என யோசித்தவர்களாக,
இது தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் தீர்க்கப்படவேண்டிய விஷயமாகவும் எனக்குப்படுகிறது. அரசாங்க வேலை செய்வதற்கெனவே ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் உள்ள போது அதை எப்படித் தாங்கள் மறுக்க முடியும்? இது விஷயமாக, நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே சட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவராக இருந்த அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகி, இதற்கு ஓர் முடிவு செய்வோம் என உமர் ரலி அன்ஹு கூறினார்கள். பிறகு இருவருமே அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகினார்கள்.
விவரங்களைக் கேட்டறிந்த அபூஉபைதா (ரலி) அவர்கள், ‘இறைத் தூதுர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ‘பைத்துல்மால்’ என்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. எனவே அதிலிருந்து அபூபக்கர் (ரலி) அவர்கள் மாதாமாதம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு சம்பளமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்குத் தடையில்லை என்று தீர்ப்பு சொன்னார்கள். அதோடு ஒரு தொகையையும் சம்பளமாக அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.
👉🏼மேற்கூறப்பட்ட இந்த நிகழ்விலிருந்து ஆலிம்கள் தங்களுக்கு போதுமான சம்பளத்தை பெற்றுக்கொண்டு வேலை செய்யலாம் என்பதை நமக்கு முன்மாதிரி வழி காட்டியாக சமுதாயப் பணிகளில் ஈடுபட்ட கலீஃபாக்களின் வரலாறுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படி இருக்கும் போது, இந்த தப்லீக் அமைப்பினர் ஆலிம்களின் விஷயத்தில் வேண்டுமென்றே சமூகத்தில் குழப்பங்களை உண்டு பண்ணுகிறார்கள் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
அடுத்து, இப்படி பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற ஆலிம்களின் விஷயத்தில் குர்ஆன் வசனமும் இருக்கிறது.
அல்பகரா-வசனம்: 273 ல் அல்லாஹ் கூறுகிறான்.
لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ
لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ
يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ
تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ
إِلْحَافًا ۗ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களில் (ஆலிம்களுக்கும்) (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான். அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள். (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.
(Sura Al-Baqarah, Ayah:273)
இதுதான் இன்றைக்கு நிதர்சனமான உண்மை!
மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் ஆலிம்களின் விஷயத்திலும் ஐந்து(5) விதமான அடையாளங்களைக் கொண்டு பட்டியலிடுகிறான்.
1.தங்களை மார்க்கத்திற்க்காக அற்பணித்தவர்கள்.
2.பிறரிடம் யாசிக்க மாட்டார்கள்.
3.ஆலிம்களைப் பார்த்தால் மற்றவர்கள் அவர்களின் பேணுதலைக் கண்டு ஆலிம்களை செல்வந்தர்களைப் போல் எண்ணுவார்கள்.
4.சில அடையாளங்களால் அவர்கள் ஏழைகள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
5.மக்களிடம் வரிந்து கொண்டு எதையும் கேட்க மாட்டார்கள்.
இன்றைக்கு ஆலிம்களின் பலர்களின் நிலைமை இது தான். வீட்டில் சாப்பிட உணவிருக்காது. ஆனாலும் அந்த ஆலிமின் தோற்றம் பார்ப்பதற்கு செல்வந்தர் போல நீட்டா ட்ரஸ் பண்ணிருப்பார்.
👉🏻இப்படி இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு தங்களின் தஃவா எனும் இமாமத் மற்றும் மத்ரஸா பணிகளில் சற்றும் சளைக்காமல் பணி செய்யும் இவர்களால் எப்படி சம்பளம் வாங்காமல் வாழ்க்கை நடத்த முடியும்?
அடுத்து...
ஆலிம்கள் விபச்சாரிகளை விடக் கேவலமானவர்களா?
சூரா அல்ஃபாதிர்: வசனம்-28 லும்,
சூரா அஸ்ஸுமர்: வசனம்-9 லும்,
சூரா அல் அன்கபூத்: வசனம்-43 லும்
ஆலிம்களின் தரத்தையும், அந்தஸ்த்தையும் மிக அற்புதமாக அல்லாஹுவே குர்ஆனில் சுட்டிக் காட்டும் போது...
எப்படி இந்த தப்லீக் அமைப்பினரின் கண்களுக்கும், புத்திக்கும், ஆலிம்கள் விபச்சாரிகளை விடக் கேவலமானவர்களாக ஆனார்கள்?
( இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த வார்த்தைகளை ஆலிம்களின் விஷயத்தில் பயன்படுத்திய, இந்த தப்லீக் அமைப்பினர் நிச்சயமாக அல்லாஹுவிடத்தில் இதற்கான பதில் சொல்லியே ஆக வேண்டும். வழிகேட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த வஹ்ஹாபிய தப்லீக் அமைப்பினர்களை அல்லாஹுவிடத்தில் ஒப்படைப்போம். இவர்களுக்கு தகுந்த கூலியை வழங்க அல்லாஹ்வே போதுமானவன்)
அடுத்து...
ஆலிம்களை விட விபச்சாரிகள் சுவர்க்கத்தில் முன்னால் நுழைவார்களா..?
👉🏻இதோ நபிகளார் சொல்லும் ஆலிம்களின் சிறப்புகளை பாருங்கள்.
(1) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ
النَّبِيُّ ﷺ: إِنَّ مَثَلَ الْعُلَمَاءِ كَمَثَلِ
النُّجُومِ فِي السَّمَاءِ يُهْتَدَي بِهَا فيِ
ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ فَإِذَا انْطَمَسَتِ
النُّجُومُ أَوْ شَكَ أَنْ تَضِلَّ الْهُدَاةُ.
(رواه احمد:٣ /١٥٧)
ஆலிம்கள் கடலிலும், தரையிலும் வழி தெரிந்து கொள்ள இருளில் உதவும் நட்சத்திரங்களுக்கு ஒப்பானவர்கள். நட்சத்திரங்கள் ஒளியிழந்து விடுமாயின் நடந்து செல்வோர் வழி தவறிவிடலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:முஸ்னது அஹ்மது)
அடுத்துதாக...
(2) عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: قَالَ رَسُولُ
اللهِ ﷺ: فَقِيهٌ أَشَدُّ عَلَي الشَّيْطَانِ مِنْ اَلْفِ عَابِدٍ.
(رواه الترمذي/ رقم:٢٦٨١)
மார்க்கத்தைக் கற்றறிந்த ஓர் ஆலிம் ஆயிரம் ஆபிதுகளைவிட ஷைத்தானுக்கு மிகக் கடினமானவர்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:திர்மிதீ)
அடுத்ததாக...
(3) عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّؓ قَالَ: ذُكِرَ
لِرَسُولِ اللهِ ﷺ رَجُلاَنِ أَحَدُهُمَا: عَابِدٌ
وَاْلآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللهِﷺ:
فَضْلُ الْعَالِمِ عَلَي الْعَابِدِ كَفَضْلِي
عَلَي أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ ﷺ:
إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلُ السَّموَاتِ
وَاْلاَرْضِينَ حَتَّي النَّمْلَةَ فيِ جُحْرِهَا
وَحَتَّي الْحُوتَ لَيُصَلُّونَ عَلَي مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ.
(رواه الترمذي/رقم:٢٦٨٥)
ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், கல்வி கற்ற ஓர் ஆலிம், வணக்கசாலியான ஓர் ஆபித் ஆகிய இரு மனிதர்களைப் பற்றி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்ட போது, ஆபிதைவிட ஆலிமுக்குள்ள சிறப்பு, உங்களில் சாதாரண மனிதரைவிட எனக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.மேலும், மக்களுக்கு நன்மையானவற்றைக் கற்பிப்பவர் மீது, அல்லாஹ், அவனது மலக்குகள், வானம் பூமியிலுள்ள சகல படைப்புகள், புற்றுகளிலுள்ள எறும்புகள், மீன்களும் கூட (நீரில் தத்தமது முறைப்படி) ரஹ்மத்தைப் பொழியுமாறு துஆச் செய்கின்றன'' என்று கூறினார்கள்.(ஆதாரம்:திர்மிதீ)
அடுத்ததாக...
(4) عَنِ الْحَسَنِؒ قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ
ﷺ عَنْ رَجُلَيْنِ كَانَا فِي بَنِي
إِسْرَائِيلَ أَحَدُهُمَا كَانَ عَالِماً يُصَلِّي
الْمَكْتُوبَةَ ثُمَّ يَجْلِسُ فَيُعَلِّمُ النَّاسَ
الْخَيْرَ وَاْلآخَرُ يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ
أَيُّهُمَا أَفْضَلُ؟ قَالَ رَسُولُ اللهِ ﷺ:
فَضْلُ هذَا الْعَالِمِ الَّذِي يُصَلِّي
الْمَكْتُوبَةَ ثُمَّ يَجْلِسُ فَيُعَلِّمُ النَّاسَ
الْخَيْرَ عَلَي الْعَابِدِ الَّذِي يَصُومُ النَّهَارَ
وَيَقُومُ اللَّيْلَ كَفَضْلِي عَلَي أَدْنَاكُمْ رَجُلاً. (رواه الدارمي:١ /١٠٩)
ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், பனீ இஸ்ராயீலைச் சேர்ந்த இரு மனிதர்களில் ஒருவர் ஆலிம். அவர் பர்ளுத் தொழுதுவிட்டு மக்களுக்கு நன்மையான காரியங்களைக் கற்பிப்பதில் ஈடுபடுவார். மற்றவர் பகலில் நோன்பு வைத்து இரவில் வணக்கத்தில் ஈடுபடுவார், 'இவ்விருவரில் மிகச்சிறந்தவர் யார்?'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, பகலில் நோன்பு வைத்து இரவில் இபாதத் செய்யும் அந்த ஆபிதைவிட, பர்ளுத் தொழுது விட்டு மக்களுக்கு நல்ல காரியங்களைக் கற்பிப்பதில் ஈடுபட்டிருக்கும் அந்த ஆலிமின் சிறப்பு, உங்களில் சாதாரண மனிதரைவிட எனக்குள்ள சிறப்பைப் போன்றது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:தாரமீ)
அடுத்ததாக...
(5) عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّ
ﷺ: أَنَّ عِيسَي ابْنَ مَرْيَمَؑ قَالَ: إِنَّمَا
اْلأُمُورُ ثَلاَثَةٌ: أَمْرٌ تَبَيَّنَ لَكَ رُشْدُهُ
فَاتَّبِعْهُ وَأَمْرٌ تَبَيَّنَ لَكَ غَيُّهُ فَاجْتَنِبْهُ
وَأَمْرٌ أُخْتُلِفَ فِيهِ فَرُدَّهُ إِلَي عَالِمِهِ (رواه الطبراني مجمع الزوائد/١/٣٩٠)
காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும், முதலாவது, சத்தியம் என்று உனக்குத் தெளிவாகத் தெரிந்தது, அதை நீ பின்பற்று, இரண்டாவது, அசத்தியம் என்று உனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்து கொள், மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவரான வழியா? என்று உனக்குத் தெளிவாகத் தெரியாதது, அதை அறிந்தவர்களிடம், (ஆலிம்களிடம்) கேட்டுத் தெரிந்துகொள்!'' என்று ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் சொன்னதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்:தப்ரானீ)
(6) عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ؓ اَنَّ رَسُوْلَ
الله ﷺ قَالَ: لَيْسَ مِنْ اُمَّتِيْ مَنْ لَمْ
يُجِلَّ كَبِيْرَنَا، وَيَرْحَمْ صَغِيْرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا حَقَّهُ.
(رواه احمد والطبراني في الكبير واسناده حسن مجمع الزوائد:١ /٣٣٨)
நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவரும், ஆலிம்களின் உரிமைகளை அறியாதவரும் என் சமுதாயத்தைச் சார்ந்தவரல்லர்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உபாதத் இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
(7) عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ
اللهِ ﷺ: اُوْصِي الْخَلِيْفَةَ مِنْ بَعْدِيْ
بِتَقْوَي اللهِ، وَاُوْصِيْهِ بِجَمَاعَةِ
الْمُسْلِمِيْنَ، اَنْ يُعَظِّمَ كَبِيْرَهُمْ، وَيَرْحَمَ
صَغِيْرَهُمْ، وَيُوَقِّرَ عَالِمَهُمْ، وَاَنْ لاَ
يَضْرِبَهُمْ فَيُذِلَّهُمْ، وَلاَ يُوَحِّشَهُمْ
فَيُكْفِرَهُمْ، وَاَنْ لاَ يُخْصِيَهُمْ فَيَقْطَعَ
نَسْلَهُمْ، وَاَنْ لاَ يُغْلِقَ بَابَهُ دُوْنَهُمْ
فَيَأْكُلَ قَوِيُّهُمْ ضَعِيْفَهُمْ.
(رواه البيهقي في السنن الكبري:٨/١٦١)
அல்லாஹுதஆலாவைப் பயப்பட வேண்டுமென்றும், முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பற்றியும், முஸ்லிம்களில் பெரியவர்களை மதிக்க வேண்டுமென்றும், அவர்களில் சிறியவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுமென்றும், அவர்களில் ஆலிம்களைக் கண்ணியப்படுத்த வேண்டுமென்றும், இழிவடையும் அளவுக்கு முஸ்லிம்களை அடிக்க வேண்டாமென்றும், இஸ்லாத்தைவிட்டுவிடும் அளவுக்கு அச்சுறுத்த வேண்டாமென்றும், அவர்கள் சந்ததியற்றுவிட வேண்டும் என்பதற்காக அவர்களைக் காயடிக்க வேண்டாமென்றும், அவர்கள் உங்களிடம் முறையிடுவதற்காக வரும்போது உங்கள் கதவுகளை மூட வேண்டாமென்றும், அவ்வாறு செய்தால் அவர்களில் பலசாலிகள் பலவீனர்களை விழுங்கிவிடுவார்கள். (அநியாயம் பரவிவிடும்) என்றும் எனக்குப் பிறகு வரும் என் கலீஃபாவு (பிரதிநிதி)க்கு இறுதி உபதேசம் செய்கிறேன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்:பைஹகீ)
(7) عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: إِنِّي
سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ
سَلَكَ طَرِيقاً يَطْلُبُ فِيهِ عِلْماً سَلَكَ
اللهُ بِهِ طَرِيقاً مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ
الْمَلاَئِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضاً لِّطَالِبِ
الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فيِ
السَّموَاتِ وَاْلاَرْضِ وَالْحِيتَانُ فيِ جَوْفِ
الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَي الْعَابِدِ
كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَي سَائِرِ
الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ اْلاَنْبِيَاءِ وَإِنَّ
اْلاَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلاَ دِرْهَماً
وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ.
(رواه ابوداؤد باب في فضل العلم رقم:٣٦٤١)
எவர் மார்க்கக் கல்வியைக் கற்க ஏதேனும் ஒரு வழியில் நடந்து செல்கிறாரோ, அவரை அல்லாஹ் சுவர்க்க வழிகளில் ஒன்றில் நடக்கச் செய்கிறான். மார்க்கக் கல்வியைக் கற்பது சுவர்க்கத்தில் நுழையக் காரணமாகிறது. மார்க்கக் கல்வி கற்பவரை மகிழ்விப்பதற்காக மலக்குகள் தம் இறக்கைகளை விரிக்கின்றனர். வானம், பூமியிலுள்ள சகல படைப்புகளும் நீரிலிருக்கும் மீனினங்களும் கல்வி கற்றவரின் பாவமன்னிப்புக்காகத் துஆச் செய்கின்றன. நட்சத்திரங்களைவிட பதினான்காம் இரவின் நிலவுக்குச் சிறப்பு இருப்பது போன்று, நிச்சயமாக வணக்கசாலியை(ஆபிதை)விட கற்றவருக்குச் சிறப்பு இருக்கிறது. நிச்சயமாக கற்றவர்கள் நபிமார்களின் வாரிசுகளாவார்கள், நபிமார்கள் தீனார், திர்ஹம்(சொத்து, செல்வங்)களை அனந்தரச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. அவர்களோ, கல்வி ஞானங்களையே அனந்தரச் சொத்தாக விட்டுச் சென்றார்கள். எனவே, தீனுடைய இல்மைப் பெற்றவர் (வாரிசு சொத்திலிருந்து) முழுமையான பங்கைப் பெற்றுக் கொண்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:அபூதாவூது)
(8) عَنْ مُعَاذِنِ الْجُهَنِيِّؓ أَنَّ رَسُولَ اللهِ
ﷺ قَالَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا
فِيهِ أُلْبِسَ وَالِدَاهُ تَاجاً يَوْمَ الْقِيَامَةِ
ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي
بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ فَمَاظَنُّكُمْ
بِالَّذِي عَمِلَ بِهذَا.
(رواه أبوداود باب في ثواب قراءة القرآن رقم: ١٤٥٣)
குர்ஆனைக் கற்று அதன்படி செயல்படுபவரின் பெற்றோருக்கு கியாமத் நாளில் சூரியனைவிட ஒளிமிக்க கிரீடம் சூட்டப்படும்'', அந்தச் சூரியன் உங்கள் வீடுகளுக்குள் இருந்தால் (எந்த அளவு ஒளி வீசுமோ அதைவிட அதிகமான ஒளியை அந்தக் கிரீடம் தரும்) இந்நிலையில் குர்ஆன்படி அமல் செய்பவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பெற்றோருக்கே இந்த வெகுமதியென்றால், அமல் செய்பவருக்கு இதைவிட ஏராளமான வெகு மதிகள் கிடைக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்:அபூதாவூது)
ஆக, இவ்வளவு சிறப்புகளையும் அல்லாஹ், தன் ஹபீப் நபிகளாரின் மூலம் ஆலிம்களுக்கான சிறப்புகளை சொல்லிக் காட்டிருக்கும் போது...
எப்படி இந்த வஹ்ஹாபிய தப்லீக் அமைப்பினர் நாவு கூசாமல் இப்படிப் பேசுகிறார்கள்?
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் பார்த்தால்...
ஹதீஸ் No:3 ல்- அல்லாஹுவும், மலக்குகளும், வானம்,பூமியின் மொத்த படைப்புகள், எறும்புகள், மீன்கள் அனைத்தும் ஆலிம்களுக்காக துஆ செய்கிற போது...
இந்த தப்லீக் அமைப்பினர் மாத்திரம், ஆலிம்களை விட விபச்சாரிகள் முன்னால்
சுவனம் சென்று விடுவார்கள் என்றால் என்ன அர்த்தம்? இவர்கள் சூசகமாக ஆலிம்கள் நரகம் தான் செல்வார்கள் என்று தானே சொல்ல வருகிறார்கள். அப்படியென்றால் இந்த தப்லீக் அமைப்பினர் அல்லாஹுவுக்கும், அல்லாஹுவுடைய படைப்புகளுக்கும் எதிராகத் தானே செயல் படுகிறார்கள். அப்படியானால் இந்த தப்லீக் அமைப்பினருக்கு நாளை மறுமையில் என்ன கிடைக்கும்? சுவர்க்கமா? நரகமா? அல்லாஹுவே அறிந்தவன்.
அடுத்து ஹதீஸ்No:4 ல்-
உங்களில் ஆலிம்களுக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களை விட எனக்குள்ள சிறப்பை போன்றது என நபிகளார் சொல்லியிருக்கும் போது, அப்பேற்பட்ட சிறப்புக்குரிய ஆலிம்களை இழிவு படுத்தும் விதமாக, இந்த தப்லீக் அமைப்பினர் சொல்கிறார்கள் என்றால், இவர்களின் நாளை மறுமையின் நிலை என்னவாகும்..?
(நமக்கு அல்லாஹுவே போதுமானவன்)
அடுத்து ஹதீஸ்No:6 ல்- ஆலிம்களின் உரிமையை அறியாதவர் என் சமுதாயத்தைச் சார்ந்தவர் அல்ல! என நபிகளார் சொல்லியிருக்கும் போது, இந்த தப்லீக் அமைப்பினர் ஆலிம்களைப் பற்றி அவர்களின் உரிமையை அறிந்தும் வேண்டுமென்றே இவ்வளவு படு மோசமாக சொல்லியிருக்கிறார்கள் என்றால், இந்த தப்லீக் அமைப்பினரை நபிகளாரின் ஹதீஸின் படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார்கள் என்று தானே நாம் சொல்ல வேண்டும்.
அடுத்து ஹதீஸ்No:7 லும், 8 லும் மார்க்கக் கல்வியை கற்க ஒருவர் புறப்பட்டாலே, அவருக்கு சுவனத்தின் வழிகளில் அல்லாஹ் நடக்கச் செய்கிறான் என்றால், அந்த மார்க்கக் கல்வியை முழுமையாக்கிய ஆலிமுக்கு சுவனத்தில் எவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைக்கும்.
இன்னும் ஆலிம்களின் பெற்றோர்களுக்கு மறுமையில் அல்லாஹுவால் கிரீடம் அணிவிக்கப்படும் என்றால், மறுமையில் ஆலிம்களின் அந்தஸ்த்தை அல்லாஹ் எப்படி வைத்திருப்பான்.! ஆக, அல்லாஹுவால் ஒரு கூட்டத்திற்கு சுவனம் உண்டு என்று சொல்லப் பட்ட பின்னால், அப்பேற்பட்ட இந்த ஆலிம்களுக்கு சுவனம் கிடைக்காது என்று இவர்கள் சொன்னால், இந்த தப்லீக் அமைப்பினர் நாளை மறுமையில் சுவனம் செல்ல முடியுமா?
எனவே மார்க்க ஞானம் பெற்ற ஆலிம்கள் என்றைக்கும் ஆலிம்கள் தான். விபச்சாரி என்றைக்கும் விபச்சாரி தான். ஒருகாலும் ஒரு விபச்சாரிக்கு, ஆலிமை விட சிறப்பிலும், சுவர்கத்திலும் முன்னுரிமை கிடைக்கப் போவதில்லை என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நமக்கு மிகத் தெளிவாக நபிகளார் சொல்லித் தருகிறார்கள்.
குற்றச்சாட்டு: (5)ற்கான பதில்.
-------------------------
செல்போனில் குர்ஆனைப் பார்த்து ஓதுதல், சிறுநீர் கழித்த பாத்திரத்தில் பால் ஊற்றி குடிப்பது போல, என்கின்றனர் இந்த தப்லீக் அமைப்பினர்...
இதற்கான தெளிவு என்ன என்பதைப் பார்ப்போம்...
(1)عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ عَن
النَّبِيِّ ﷺ قَالَ: يُقَالُ يَعْنِي لِصَاحِبِ
الْقُرْآنِ اِقْرَأْ وَارْقَ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ
فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا.
(رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ان الذي ليس في جوفه من القران ...رقم:٢٩١٤)
(கியாமத் நாளில்) குர்ஆன் உடையவரிடம், சிறப்புமிக்க குர்ஆனை ஓதிக் கொண்டே செல்! சுவனத்தின் படித்தரங்களில் ஏறி நிறுத்திக் கொண்டே செல்! உலகில் நிறுத்தி, நிறுத்தி ஓதிக் கொண்டிருந்ததுபோல், இங்கும் நீர் நிறுத்தி ஓது! நீர் கடைசி ஆயத்தை ஓதி முடிக்கும் இடம் தான் உமது தங்குமிடம்'' என்று சொல்லப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
(2) عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ
ﷺ (لأَبِي ذَرٍّ:( عَلَيْكَ بِتِلاَوَةِ الْقُرْآنِ
وَذِكْرِ اللهِ فَإِنَّهُ ذِكْرٌ لَّكَ فِي السَّمَاءِ
وَنُورٌ لَّكَ فِي اْلاَرْضِ.
(وهو جزء من الحديث)
(رواه البيهقي في شعب الايمان ٤/٢٤٢)
அபூதரே, குர்ஆன் ஓதுவதையும் அல்லாஹ்வை திக்ர் செய்வதையும் பேணுதலாகச் செய்து வருவீராக! இந்த அமலால் வானத்தில் உம்மைப் பற்றி நினைவு கூறப்படும். மேலும், இது பூமியில் உமக்கு ஹிதாயத்தின் (நேர்வழியின்) ஒளியாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)
(3) عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ أَنَّ رَسُولَ
اللهِ ﷺ قَالَ: اَلصِّيَامُ وَالْقُرْآنُ
يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ
الصِّيَامُ: أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ
وَالشَّهْوَةَ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ
الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي
فِيهِ قَالَ: فَيُشَفَّعَانِ لَهُ.
(رواه احمد والطبراني في الكبير ورجال الطبراني رجال الصحيح مجمع الزوائد:٣ /٤١٩)
நோன்பும் குர்ஆனும் கியாமத் நாளில் அடியானுக்காகப் பரிந்து பேசும், இறைவனே! உணவு, மன இச்சைகள் போன்றவற்றை விட்டும் நான் இவரைத் தடுத்திருந்தேன். இவருடைய காரியத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!' என்று நோன்பு கூறும், இரவில் தூங்குவதை விட்டும் இவரை நான் தடுத்திருந்தேன். (இவர் இரவில் நபில் தொழுகைகளில் என்னை ஓதிவந்தார்) இவருடைய காரியத்தில் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!' என்று குர்ஆன் சொல்லும். இவ்வாறே அவ்விரண்டும் இவருக்காகப் பரிந்து பேசும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
(4) عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ
اللهِ ﷺ: نِمْتُ فَرَأَيْتُنِيْ فِي الْجَنَّةِ
فَسَمِعْتُ صَوْتَ قَارِيءٍ يَقْرَأُ، فَقُلْتُ:
مَنْ هذَا؟ قَالُوْا: هذَا حَارِثَةُ بْنُ
النُّعْمَانِ فَقَالَ لَهَا رَسُوْلُ اللهِ ﷺ:
كَذَاكَ الْبِرُّ كَذَاكَ الْبِرُّ وَكَانَ اَبَرَّ النَّاسِ بِأُمِّهِ. (رواه احمد:٦ /١٥١.)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், நான் உறங்கிக் கொண்டிருந்தேன். நான் சுவனத்தில் இருக்கக் கனவு கண்டேன். அங்கு நான் குர்ஆன் ஓதுபவரின் சப்தத்தைச் செவியுற்று, யார் இவர்?'' (சுவனத்தில் வந்து குர்ஆன் ஓதுகிறார்) என வினவினேன். இவர் ஹாரிஸத்துப்னு நுஃமான்'' என மலக்குகள் பதிலளித்தார்கள். பிறகு நன்மை இவ்வாறுதான் இருக்கும், நன்மை இவ்வாறுதான் இருக்கும், நன்மை என்னும் பழம் இவ்வாறு தான் இருக்கும்'' என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
மேற்கூறப்பட்டிருக்கும் ஹதீஸ்களில் குர்ஆனை ஒருவர் ஓதுவதற்கான நன்மைகளையும், அதற்கான அந்தஸ்துகளையும் மிக அற்புதமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொல்லித்தரும் போது, குர்ஆனை "ஓதுதல்" என்கிற வார்த்தையைத்
தான் நபிகளார் பதிவு செய்கிறார்கள்.
👉🏻இதிலிருந்தே தெரிகிறது, குர்ஆனை ஓதுவது என்பது மட்டும் தான் முக்கியமே தவிர, அதனை எப்படி வேண்டுமானாலும் ஓதிக் கொள்ளலாம் என்பது நமக்கு மிக அழகாக விளங்குகிறது!
எனவே இந்த தப்லீக் அமைப்பினர் மொபைலில் குர்ஆனைப் பார்த்து ஓதுவதை இழிவு படுத்தும் விதமாகச் சொல்லுவது,
முற்றிலும் மார்கத்திற்கு முரணான செய்திகளாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
(சிந்தனைக்காக...
இந்த தப்லீக் அமைப்பினர் மொபைலில் குர்ஆனைப் பார்த்து ஓதக்கூடாது என்று சொல்லும் இந்த செய்திக்கு சில விளக்கம்... மொபைலில் குர்ஆனைப் பார்த்து ஓதக் கூடாது என்று சொல்லுவதற்கு காரணம்? இவர்கள் மறைமுகமாக அதில் பலவித தீமைக்கான காட்சிகளும், செய்திகளும், ஆபாசங்களும் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய சூழல் இருப்பதால் தான், இவர்கள் கூடாது என்கிற வார்த்தைகளை அதை வேறு விதமாக அறுவறுக்கத்தக்க விதத்தில் பயன் படுத்தி (ஃபத்வா)என்கிற அடிப்படையில் பரப்பி இருக்கிறார்கள். இது ஒன்றும் இப்படி சொல்லி விட்டார்களே! என்று ஆச்சர்யப் படும் அளவிற்கு புதிதல்ல. ஏனென்றால் நபிகளாரின் விஷயத்தில், தொழுகையில் ஒருவருக்கு நபியின் ஞாபகம் வருவதை ஆடு, மாடு இவைகள் ஞாபகம் வருவதை விட கேவலமாகும் என்றெல்லாம், தங்களின் அதிமூதேவித்தனமான வார்த்தைகளைக் கொண்டு வர்ணித்தவர்கள் இந்த தப்லீக் அமைப்பினர். இதற்கு மேல் இவர்கள் சொன்னாலும் நாம் ஆச்சர்யப் படுவதற்கில்லை. இருந்தாலும் பொதுமக்களுக்கு அதை விளக்கும் முகமாக சில விளக்கங்களை நாம் சொல்லியாக வேண்டுமென்கிற கடமையை கருத்தில் கொண்டு சொல்கிறோம். அது என்ன விளக்கம்? மேற்கூறப்பட்ட ஹதீஸில் ஒருவர் குர்ஆனை ஓதி அதன் மூலம் தனக்கு சிறப்பு கிடைக்க வேண்டுமென ஆசைப் பட்டால், அவர் குர்ஆனை பார்த்தும் ஓதலாம், அவர் குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழாக இருப்பாரேயானால்
பார்க்காமலும் அவர் குர்ஆனை ஓதலாம். அவ்வாறு ஓதியதற்கு அல்லாஹுவிடத்தில் அவருக்கான நன்மைகளும், அந்தஸ்துகளும் கிடைக்கும் என்பது ஹதீஸ்களின் மூலமாக நாம் அறிந்த உண்மை. அப்படியிருக்கும் போது, குர்ஆனை மனனம் செய்த ஒருவர், தன்னுடைய மனதில் பதிய வைக்கப் பட்ட குர்ஆனை ஓத நினைக்கிறார். ஆனால் அவரிடத்தில் சில தவறுகளும், குற்றங்களும், பாவங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது அவரை (உன்னுடைய மனதிலுள்ள) குர்ஆனை நீ பார்க்காமல் ஓதக் கூடாது. ஏனெறால், உன்னுடைய உள்ளத்தில் பல தவறுகளும், குற்றங்களும், பாவங்களும் நிகழ்கிறது. எனவே தவறுகள் கலந்து விட்ட, குற்றங்கள் கலந்து விட்ட, பாவங்கள் கலந்து விட்ட கல்பிலுள்ள குர்ஆனை நீர் பார்க்காமல் ஓதுவது என்பது, அது சிறுநீர் கழித்த பாத்திரத்தில் பால் குடிப்பதைப் போன்றது என்று சொன்னால், நாம் அதை ஒத்துக் கொள்வோமா..? அவ்வாறு எவன் சொல்கிறானோ, அவனைப் பார்த்து நாம், போடா *லூசு* ப்பயலே என்று தான் சொல்வோம். அதுபோல தான் ஒருவரிடம் இருக்கக் கூடிய மொபைலும்! எப்படி பலவிதமான தவறுகளையும், குற்றங்களையும், பாவங்களையும் கலந்து பதிய வைத்துக் கொண்டிருக்கும் கல்பில், எப்படி குர்ஆனையும் நாம் மனனமிட்டு பதிய வைத்திருக்கிறோமோ அதே போல் தான், இந்த மொபைலும். மனிதனுடைய உடம்பில் பல நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கான உறுப்பாக கல்பு எப்படி இருக்கிறதோ, அது போல தான் மொபைல் என்கிற அந்தப் பொருளிலும் பல நிகழ்வுகளை பதிவு செய்வதற்கான, இன்னும் ஒரு காட்சியை அல்லது பொருளை அல்லது ஒரு வீடியோவை அதை பார்த்து ரசிப்பதற்கான மெமொரி என்கிற (ஸ்பேசும்) இடமும் இருக்கிறது. எனவே எந்த இடத்தில் மொபைலில் செய்திகள் பதியப் படுகிறதோ, அதே மெமொரியில் தான் குர்ஆன் போன்ற நன்மைகளுக்கான செய்திகளும் பதியப் பட முடியும். எனவே ஒருவர் நன்மையான விஷயங்களை மொபைல் மூலம் ஒருவர் பார்க்கவோ, ஓதவோ முற்பட்டால் அதை இப்படித்தான் செய்தாக வேண்டும். அப்படி இருக்கும் போது, எப்படி இந்த வஹ்ஹாபிய தப்லீக் அமைப்பினரால் சிந்திக்க முடிகிறது, சொல்ல முடிகிறது, எனவே மார்க்கம் என்கிற பெயரில் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இவர்கள் சொல்லும் செய்திகள், சமூகத்தில் பலவிதமான குழப்பங்களைத் தான் அதிகமாக ஏற்படுத்துகிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
(அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக...ஆமீன்)
அடுத்ததாக, இவர்களின் நிலைப்பாடுகள்:
----------------------
இந்த தப்லீக் அமைப்பினரின் நிலைபாடுகள் பற்றி நம்முடைய பதிவில் கிட்டத்தட்ட ஆறு விதமான செயல்பாடுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறோம். (இது மாத்திரமே இவர்களின் நிலைபாடுகள் இல்லை. இன்னும் இந்த தப்லீக் அமைப்பினரின் நிலைபாடுகள், நமது சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமாக ஏகப்பட்ட நிலைபாடுகள் இருக்கிறது. ஒரு குறிப்பிற்காகவே ஆறு செய்திகளை மாத்திரமே சொல்லியிருக்கிறோம்)
இந்த தப்லீக் அமைப்பினரின் நிலைபாடுகள் மற்றய வஹ்ஹாபிகளின் நிலைபாடுகள் போன்றது தான். ஆனால், இந்த தப்லீக் அமைப்பினர் சுன்னத் வல் ஜமாஅத் மக்களோடு கலந்து இருக்கிறார்கள்.
இன்னும் இந்த தப்லீக் அமைப்பினர் தங்களுக்கு ஆதாயம் தேவைப்படும் பட்சத்தில் தற்போது சாதகமாக அவர்கள் சொல்லும் பல பித்தலாட்ட ஃபத்வாக்கள் என்னென்ன
என்பதையெல்லாம் இன்னும் சில செய்திகளை பார்ப்போம்.
சமீபத்திய குழப்பங்களில் ஒரு சில...
குழப்பம் No:(1)
--------------
அதாவது தங்களுடைய 3 நாள், 10 நாள், 40 நாள் ஜமாத்துக்குச் செல்லுவது என்பது, அது ஸஹாபிகள் செய்தது என்று எதை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள் பாருங்கள். அதாவது நாங்கள் (சட்டி, பெட்டி, சாப்பாடு பாத்திரங்களை தூக்கிக் கொண்டு) செல்லக் கூடிய இந்த செயலைத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸெய்யிதினா முஆத்(ரலி) அவர்களை க் செய்வதற்குப் போகச் சொல்லி அனுப்பி வைத்தார்கள் என்று ஆதாரமாகச் சொல்கிறார்கள்.
அது என்ன சம்பவம்? அப்படி ஒரு விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்திருக்கிறார்களா? என்று நாம் ஆய்வு செய்கிற போது, அவர்கள் சொல்கிற செய்தி என்வென்று பார்த்தால்...
அப்போது தான் தெரிகிறது, இவர்கள் எப்பேற்பட்ட வழிகேட்டை மார்க்கம் என்கிற பெயரில் நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி என்ன நிகழ்வை நபிகளார் முஆத் ரலி அவர்களிடத்தில் செய்யச் சொன்னார்கள் என்கிற அந்த செய்தியைப் பார்ப்போம்.
عن ابن عباس أن معاذا- قال بعثني
رسول الله صلى الله عليه وسلم
قال: إنك تأتي قوما من أهل الكتاب.
فادعهم إلى شهادة أن لا إله إلا الله
وأني رسول الله فإن هم أطاعوا لذلك
فأعلمهم أن الله افترض عليهم
خمس صلوات في كل يوم وليلة فإن
هم أطاعوا لذلك فأعلمهم أن الله
افترض عليهم صدقة تؤخذ من
أغنيائهم فترد في فقرائهم فإن هم
أطاعوا لذلك فإياك وكرائم أموالهم
واتق دعوة المظلوم فإنه ليس بينها
وبين الله حجاب
(முஸ்லிம்-130)
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்.
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிக்கும்படி அவர்களுக்கு அழைப்பு விடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள்மீது அல்லாஹ் ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தைக் கடமையாக்கியுள்ளான் என்றும், அது அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், (அவர்களிடம் ஸகாத்தை வசூலிக்கும்போது) அவர்களின் செல்வங்களில் (நடுத்தரமானவற்றை விடுத்து) உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அவன் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்-29)
இது தான் அந்த ஹதீஸ்...
இதில் நடந்த செய்தியை முஆது ரலி அன்ஹு அவர்களே சொல்கிறார்கள். என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் நாட்டிற்கு ஆளுநராகத் தான் அனுப்பி வைத்தார்கள் என்கிறார்கள்.
👉🏻இந்த ஹதீஸை இந்த தப்லீக் அமைப்பினர் தாங்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செல்லும் ஜமாத்திற்கு, ஆதாரமாகச் சொல்கிறார்கள். பார்த்தீர்களா...
நபியவர்கள் முஆது ரலி அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு ஜமாத்திற்கு அனுப்பினார்கள் என்று.! தாங்கள் சொல்வது மார்க்கத்திற்கு முரணான, எதிரான , அப்பட்டமான இட்டுக்கட்டைத் தான் சொல்கிறோம் என்று தெரிந்தே பகிரங்கமாக இது போன்ற குழப்பங்களை செய்கிறார்கள்.
இதைக் கேட்கக் கூடிய அப்பாவி பொதுமக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நவீன குழப்பங்களை இந்த தப்லீக் அமைப்பினர் சமீப காலங்களில் செய்து கொண்டிருக்கின்றனர்.
இதை விட இன்னொரு மிகப் பெரும் பித்தலாட்ட வேலையை இந்த தப்லீக் அமைப்பினர் செய்திருக்கிறார்கள் பாருங்கள்.
அது என்னவென்றால்,
இவர்கள் செல்லும் ஜமாத்திற்கு ஆதாரமாக பத்ருப் போரையே ஆக்கி விட்டார்கள். பார்த்தீர்களா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்(313)ஸஹாபிகளோடு மதீனாவிலிருந்து பத்ரு என்கிற இடத்திற்கு ஆண்கள் ஜமாத்தை நோன்பு வைத்துக் கொண்டு கூட்டிச் சென்றிருக்கிறார்கள் என்கிறார்கள் இந்த தப்லீக் அமைப்பினர்! ஆக, கடைசியில தங்களின் திருச்சி இஜ்திமாஃவில் மக்கள் கூட்டம் கூட, இப்படிப்பட்ட நவீன குழப்பங்களை சமூகத்தில் ஏற்படுத்தி சமூகத்தை தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற அசத்திய கொள்கைகளை விட்டும் அல்லாஹ் நம்மையும், நமது குடும்பத்தார்களையும்,கியாமத் நாள் வரையுள்ள நமது சந்ததிகளையும் பாதுகாத்தருள்வானாக... ஆமீன். வஸ்ஸலாம்.
அசத்தியத்திற்கெதிராக💪
சத்தியத்தை நோக்கி☝
எழுத்துப்பணியில்..✍🏼
🌹தங்களன்புள்ள...🌹
🎓 *மௌலவீ, அல்ஹாஃபிழ்* 🎓 _S.உதுமான் சாஹிபு அல்தாஃபி,DCA_
_*தலைமை இமாம்*:_
*அல் மஸ்ஜிதுல் இல்யாஸ்,*
தாம்பரம் (மே) சென்னை-45
0 Comments