*🌹🌹🌹கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்கலாமா ❓❓❓🏓🏓🏓* 

 *👉👉👉நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்* *பொன்மொழியில் இருந்து ஒரு பார்வை👇👇👇👇👇* 

 *👉கிப்லா திசையை இயன்ற வரை தவிர்த்தல் நலம்👈* 

✍உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் *கிப்லாவை முன்னோக்கவும் கூடாது; கிப்லாவை முதுகுக்குப் பின்னாலும் ஆக்கக் கூடாது.* கிழக்கையோ மேற்கையோ நோக்கி அமருங்கள் என்று *நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள் கூறினார்கள்.

 *👆👆👆அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)* 
 *நூல்: புகாரி 144, 394👈👈👈* 

✍ *✍✍கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமருங்கள் என்பது மதீனாவில் உள்ள மக்களைக் கருத்தில் கொண்டு சொல்லப் பட்டதாகும்.* மதீனாவிலிருந்து வடக்கு திசையில் கிப்லா அமைந்திருப்பதால் *வடக்கு தெற்காக அமராமல் கிழக்கு மேற்காக அமரச் சொன்னார்கள்* . நமது நாட்டைப் பொறுத்த வரை மேற்குத் திசையில் அல்லது வடமேற்குத் திசையில் கிப்லா அமைந்திருப்பதால் *நாம் வடக்கு தெற்காகத் தான் அமர வேண்டும்✍✍✍* .

✍✍✍கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்க *நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள் தடை செய்திருந்தாலும் இந்தத் தடை திறந்த வெளியில் தான். கட்டடத்திற்குள் *கிப்லாவை நோக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.✍✍✍* 

✍✍✍மலஜலம் கழிக்கும் போது கிப்லாவையோ, *பைத்துல் முகத்தைஸையோ நோக்காதே* என்று சிலர் கூறுகின்றனர். நான் ஒரு நாள் எனது வீட்டின் முகட்டின் மீது ஏறினேன். *நபி (ஸல்)* அவர்கள் *பைத்துல் முகத்தஸை நோக்கி இரு செங்கற்கள் மீது அமர்ந்து தமது தேவையை நிறைவு செய்ததைப் பார்த்தேன் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.✍✍✍* 

 *👆👆👆நூல்: புகாரி 145, 149👈👈👈* 

✍✍✍நான் (எனது சகோதரியும் நபிகள் நாயகத்தின் மனைவியுமான) *ஹஃப்ஸா (ரலி)* அவர்களின் வீட்டின் மேல் ஏறினேன். *நபி (ஸல்)* அவர்கள் கிப்லாவை முதுகுக்குப் பின்னால் ஆக்கி சிரியாவை முன்னோக்கி தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்று *இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.✍✍✍* 

 *👆👆👆நூல்: புகாரி 148, 3102👈👈👈* 

 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழிப்பதைத் தடை செய்திருந்தார்கள். *அவர்கள் மரணிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால்* அதை முன்னோக்கியதை நான் பார்த்திருக்கின்றேன் என்று *ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.✍✍✍* 

 *👆👆👆நூல்: முஸ்னத் அஹ்மத் 14343👈👈👈* 

 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழித்ததாக இவர் கூறுவது கட்டடத்திற்குள் நடந்ததாக இருக்க வேண்டும் என்று கருதினால் *இப்னு உமருடைய அறிவிப்பும் இவரது அறிவிப்பும் ஒத்துப் போகின்றது✍✍✍* .

✍✍✍கட்டடத்திற்குள் மலஜலம் கழிப்பதாக இருந்தால் *கிப்லாவை முன்னோக்கத் தடை ஏதும் இல்லை என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம்* என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.✍✍✍

 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதற்கு மாற்றமாக அவர்களின் செயல் அமைந்திருந்தால் *அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டுமே தவிர செயலைப் பின்பற்றக் கூடாது* என்பது கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட *விதியாகும்.✍✍✍* 

 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள் நமக்குத் தடை செய்துள்ளதால் *நாம் மலஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கக் கூடாது.* அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்ததற்கு அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்கள் இருக்கலாம் என்று *வேறு சிலர் கூறுகின்றனர்.✍✍✍* 

✍இந்த வாதத்தில் உள்ள நியாயத்தையும் புறக்கணிக்காமல் முடிவு செய்வதற்கும் வழி இருக்கின்றது.✍

 *✍✍✍திறந்த வெளியாக இருந்தால் கண்டிப்பாக கிப்லாவை முன்னோக்கவும்* பின்னால் ஆக்கவும் கூடாது. கட்டிடமாக இருந்தால் அதில் கிப்லாவை நோக்காது இருக்க வழி இருந்தால் *அப்போதும் கிப்லாவை நோக்கக் கூடாது.✍✍✍* 

✍✍✍ கட்டிடத்தில் கிப்லாவை நோக்குவதைத் தவிர *வேறு வழியில்லை என்ற நிலை இருந்தால்* அதுபோன்ற சந்தர்ப்பங்களில் கிப்லாவை *முன்னோக்குவது குற்றமில்லை.✍✍✍* 

✍✍✍இப்படி முடிவு செய்தால் *நபி (ஸல்)* அவர்கள் தாம் இட்ட கட்டளையை *தாமே ஏன் மீறினார்கள் என்பதற்கும் நமக்கு விடை கிடைக்கும்.* கிப்லாவை முன்னோக்குவதைத் தவிர *வேறு வழி இல்லை என்ற நிலை அங்கே* இருந்திருக்கலாம். அதனால் அவ்வாறு இருந்திருப்பார்கள் என்று *விளக்கம் அளிக்க இடம் உண்டு.✍✍✍* 

✍✍✍பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கிழக்கு மேற்கில் அமைக்கப் பட்டிருந்தால் *அங்கே நம்மால் வடக்கு தெற்காக அமர முடியாத நிலை ஏற்படலாம்.* அது போன்ற தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் *அது குற்றமில்லை* என்பதற்கு *நபிகள் நாயகம் (ஸல்)* அவர்களின் செயலை *ஆதாரமாகக் கொள்ளலாம்.✍✍✍* 

✍✍✍நீங்கள் கழிப்பிடம் சென்றால் *கிப்லாவை முன்னோக்காதீர்கள்.* அதைப் *பின்னோக்கவும் செய்யாதீர்கள்.* கிழக்கு மேற்காக நோக்குங்கள் என்று *நபிகள் நாயகம் (ஸல்)* அவர்கள் எங்களுக்குக் கூறியிருந்தனர். நாங்கள் சிரியாவுக்கு வந்த போது *அங்கே கிப்லாவை நோக்கி கழிவறைகள் அமைக்கப் பட்டிருப்பதைக் கண்டோம்* . எனவே சற்றே சாய்வாக அமர்ந்து *(மலம் கழித்து விட்டு) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்வோம்* என்று *அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.✍✍✍* 

 *👆👆👆நூல்: புகாரி 394👈👈👈* 

✍✍✍இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது *நம்மால் இயன்ற வரை கிப்லாவை நோக்கி மலம் கழிக்காமல் இருக்க முயல வேண்டும்* என்ற முடிவுக்கு வரலாம்✍✍✍.

 *✍✍✍வீட்டில் கிழக்கு மேற்காக கழிப்பிடம் அமைப்பதற்குத் தான் வசதி இருக்கின்றது என்றால்* - *அல்லது அமைக்கப் பட்ட* *கழிப்பிடங்களில் நாம் மலஜலம் கழிப்பதாக இருந்தால் - அது போன்ற* *சந்தர்ப்பங்களில் மட்டும் கிப்லாவை முன்னோக்குவதோ பின்னோக்குவதோ குற்றமாகாது✍✍✍* 

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன் 

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*