*சுன்னத் ஜமாஅத் அகீதா தொடர் : 34*

💦 *ஏனைய நபிமார்கள் ஏந்தல் நபியின் பிரதிபிம்பங்களாகும்*💦

           அண்ணல் நபியவர்கள் அனைத்து உயிருக்கும் ஆன்மா உலகில் வைத்தே நபியாக ஆகிவிட்டமையால் இவ்வுலகில் அனுப்பப்பட்ட நபிமார்கள் ரஸூல்மார்கள் அனைவரும் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பகரங்களாக (நாயிபாக) இருந்துதான் இவ்வுலகில் செயல்பட்டு வந்தார்கள். எனவே தான் ஒவ்வொரு நபியும் தம் கூட்டத்தாரிடம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெருமையைப் பற்றி பிரஸ்தாபம் செய்தனர்.
 *(நூருல் ழலாம் பக்கம் 25)*

         *وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من کتاب و حكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه...الخ*
 (آل عمرن_۸۱)

           நபிமார்களே! உங்களுக்கு ஞானத்தையும் வேதத்தையும் வழங்குகிறேன். உங்களுடன் உள்ளவைகளை மெய்ப்பிக்கின்ற ஒரு ரஸூல் பின்னால் திட்டமாக வருவார்கள். (அப்படி வந்துவிட்டால்) அவர்களைக் கொண்டு ஈமான் கொள்வதுடன் (அவர்களின் வருகை பற்றி உங்களின் கூட்டத்தார்களிடம் பிரஸ்தாபிப்பதின் மூலம்) அவர்களுக்கு திட்டமாக உதவியும் செய்யவேண்டும் என்று நபிமார்களிடம் (ஆன்மா உலகில்வைத்து) வாக்குறுதி எடுத்ததை நபியே நீர் நினைவுகூரும்.
(ஆல இம்ரான் 3-81)

          *وإذ قال عيسى ابن مريم يبني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة و مبشرا برسول يأتي من بعدى اسمه احمد....الخ* (الصف_٦)

        பனூ இஸ்ராஈல்களே நிச்சயமாக நான் எனக்கு முன்னால் உள்ள தவ்ராத் வேதத்தை மெய்ப்பிப்பதற்காகவும் எனக்குப் பின்னால் அஹ்மது என்ற ரஸுல் வருவார்கள் என்று சுபச் செய்தி சொல்வதற்காகவும் உங்கள் பால் அனுப்பிவைக்கப்பட்ட திருத்தூதராக இருக்கின்றேன் என்று ஈஸா நபி அவர்கள் கூறினார்கள். (61-6)

           கஃபா பேராலயத்தை கட்டி முடித்த கையுடன் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்  அவர்களும் அவர்களின் மகனார் இஸ்மாஈல் (அலைஹிஸ்ஸலாம்)
அவர்களும்

       *ربنا وابعث فيهم رسولا منهم* (البقرق_۱۲۹)

          இறைவா அவர்களில் இருந்து (அந்த) ரஸூலை அனுப்பிவைப்பாயாக என்று பெருமானாரைக் குறித்து பிரார்த்தனை புரிந்தார்கள். (2-129) இதைக் குறித்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,

*أنا دعوة إبراهيم و بشری عيسی*

            நான் பிறக்கும் முன்பே என்னைக் குறித்து என் தந்தை இப்றாஹீம் நபியவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். நான் இவ்வுலகில் வரும் முன்பே என் சகோதரர் ஈஸா நபி அவர்கள் என் வருகையைப் பற்றி சுபச் செய்தி சொல்லியுள்ளார்கள் என்று பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்
(கஸாஇஸுல் குப்ரா .பாகம் - 1 பக்கம் - 4, மிஷ்காத் பக்கம் - 513)

      இதையே இமாம் *பூஸிரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)* அவர்கள் தமது *புர்தா ஷரீஃபிலே*

*وكل آي اتي الرسل الكرام بها*

*فإنما اتصلت من نوره بهم*

        *இவ்வுலகில் உதித்த சங்கைக்குரிய ரஸூல்மார்கள் கொண்டு வந்த அத்தாட்சிகள் அனைத்தும் பெருமானாரின் பேரொளியால் அவர்களுக்கு கிடைத்தன.*

*فإنه شمس فضل هم كواكبها*

*يظهرن أنوارها للناس في الظلم*

         *ஏனெனில் நிச்சயமாக நபியவர்கள்தான் சிறப்பு என்ற சூரியனாக இருக்கின்றார்கள். மற்ற நபிமார்கள் அனைவரும் சூரியனின் பிரகாசத்தைப்பெற்று இரவு நேரத்தில் மின்னுகின்ற நட்சத்திரங்களைப் போன்றவர்களாகும்* என்று குறிப்பிடுகிறார்கள்.

🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*

🌹🌹🌹🌹🌹🌹 🌹 🌹🌹🌹